செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அண்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய தினமும் செங்கல்பட்டில் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா என்பது உறுதிசெய்யப்பட்ட\ நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 அதிகரித்துள்ளது.
இன்று மாலை இந்த எண்ணிக்கை 100யை தாண்டும் என சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது. செங்கல்பட்டு மாவட்டம் புறநகர் பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ள பகுதிகளில் 200 வீடுகளுக்கு ஒரு சுகாதார அலுவலரை நியமித்து அனைவரையும் பரிசோதித்து வருகின்றனர்.