Categories
மாநில செய்திகள்

மக்களே! கேஸ் சிலிண்டர் புக்கிங்க்…. இப்படி பண்ணுங்க – புதிய அதிரடி அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது.

அமேசான் பே ஆப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூபாய் 50 சலுகை வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கேஸை பெறுவதற்கு அமேசன் ஆப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் தற்போது ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 785 விற்பனையாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |