டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்பான மொபி குவிக் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஹோம் கிரெடிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஹோம் கிரெடிட் மணி என்ற இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ1,500 முதல் ரூ10,000 வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் வாங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படும்.
இதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த திட்டத்தில் கடனை 3 மாதங்களுக்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும். வட்டியில்லா கடன் என்றாலும் செயல்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ரூ4000 வரையிலான கடன்களுக்கு செயல்பாட்டு கட்டணம் ரூ.299. ரூ10 ஆயிரம் வரையிலான கடன்களுக்கு செயல்பாட்டு கட்டணம் ரூ.599. எடுத்துக்காட்டாக நீங்கள் 3000 ரூபாய் கடனாக பெற்றால் 3 மாதங்களுக்குள் ஆயிரம் என்ற வீதம் அளவில் கட்ட வேண்டும்.
இதற்கு செயல்பட்டு கட்டணம் ரூ.299 என மொத்தம் திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.3299 ஆகும். இதில் வட்டி எதுவும் கிடையாது. வட்டியில்லா கடன் போன்ற சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.