உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள்மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35.79 கோடியாக இருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளிலிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின்படி, உலகநாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 416 கோடி நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டனர் என்பது தினசரி அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.