Categories
அரசியல்

” மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ளேன் ” தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி…!!

வேட்பாளர் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பல பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ளேன் என்று தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று மாலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தென் சென்னை  பாராளுமன்ற தொகுதி சார்பில் திமுக_வின் மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தென் சென்னை கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சைதாப்பேட்டையில் நடைபெற்றது .

Image result for dmk

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தென் சென்னை  பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில் , தென் சென்னை பகுதியில் ஏற்கனவே இருந்த வேட்பாளர் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பல பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து உள்ளேன் . மூன்று முக்கிய பிரச்சனைகளை இந்த தொகுதி மக்கள் என்னிடத்தில் சொன்னார்கள் . சோழிங்கநல்லூர் பகுதியில் ஒரு விபத்து மருத்துவமனை  வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கின்றது என்று கூறினார்.

Image result for பள்ளிக்கரணை சதுப்பு நில மேம்பாட்டு திட்டம்

மேலும் அவர் தெரிவிக்கையில் , மேடவாக்கம் பிரதான சாலை விரிவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் மேம்படுத்தப்பட வேண்டும் பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொகுதி மக்களுடைய பள்ளிக்கரணை சதுப்பு நில மேம்பாட்டு திட்டம் என்பது ரொம்ப காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது .  சிறுசேரி முதல் திருவான்மியூர் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அவர்களின்  கோரிக்கையை நிறைவேற்றுவது என்பது என்னுடைய வாக்குறுதியாக இருக்கும் என்று கூறினார்.

Categories

Tech |