ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மக்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் ஹெரத் என்ற மேற்கு மாகாணத்தில், பசி மற்றும் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பசியைப் போக்குவதற்காக மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் கிட்னிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடுமையான விலையேற்றம், வேலையின்மை போன்ற பல காரணங்களால் அங்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிதி மற்றும் முதலீடுகள் சர்வதேச அளவில் முடக்கப்பட்டது தான் இந்த அவல நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.