சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இது போன்ற நிகழ்வு பனிப்பிரதேசத்தில்தான பார்க்கமுடியும் . இந்த முறை பனிப்பொழிவு குறைந்தளவில் இருக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது அதிசயம்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவில் நடந்த இந்த அதிசய நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் ஏற்கனேவே (2017)ல் ஒருமுறை இந்த காட்சி பொதுமக்களை ஆச்சரியப்படவைத்தது. இதனை இரு காதுகொண்ட சூரியன் என்று சீன மக்கள் வர்ணிக்கின்றனர்.