இதற்காக மணமகனின் உறவினர்கள் திருமண விழாவிற்காக ஒரு வித்தியசமான பேனர் ஒன்றை வைத்து அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளனர். அப்படி அந்த பேனரில் என்ன தான் உள்ளது என்று கேட்கிறீர்களா? அதாவது திருமண விழாவிற்கு அனைவருமே தலைப்பாக திருமணவிழா என்று தான் வைப்பார்கள்.
ஆனால் இந்த கட்-அவுட்டில் வாலிபர் கைது என்று பெரிதாக டைட்டில் வைத்து விட்டனர். கீழே கைதானவர் : J. ஸ்டீபன்ராஜ், கைது செய்தவர் : A. ஹெலன் சிந்தியா, குற்றம் : பெண்ணின் மனதை திருடியது , தீர்ப்பு : மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது சாட்சிகள் : அத்தான்மார்கள்என்றும், இடம் பெற்றிருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து செல்கின்றனர்.