அமெரிக்காவில் சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் இரண்டாம் உலகப்போருக்கு பின் வெகுவாக குறைந்திருக்கிறது.
அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் தரவுகளில் கடந்த 2020 ஆம் வருடத்தில், சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலம் 77 வருடங்களாக குறைந்திருக்கிறது.
இது, கடந்த 2019 ஆம் வருடத்தை விட ஒன்றே முக்கால் வருடங்கள் குறைவு என்று தேசிய சுகாதார புள்ளியியல் மையத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் உயிரிழப்பிற்கான காரணங்கள், புற்றுநோய் மற்றும் இதயநோய் என்று கூறப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் கொரோனா இருக்கிறது.