Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மக்கள் அமைதியாக வாழ…. சரியான நகரங்கள் இதோ…. முதல் இடம் எது தெரியுமா…??

இந்தியாவில் உள்ள மொத்த நகரங்களில் வசிக்கும் மக்களுடைய வாழ்க்கை தரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக்கொண்டு மொத்தம் 111 நகரங்களில் ஆய்வு செய்து நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு 2020 என்ற பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ளார். இந்த நகரங்கள் இந்தியாவில் அமைதியாக வாழ தகுந்த நகரங்கள் ஆகும்.

இந்த இரண்டு பிரிவுகளிலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமாக இருக்கும் நகரங்கள் குறைவாக இருக்கும் நகரங்கள் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா 10 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் எவையென்றால் பெங்களூரு, புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோவை, வதோரா, இந்தூர், மும்பை ஆகும். மேலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள நகரங்கள் சிம்லா, புவனேஸ்வர், காக்கிநாடா, சேலம், வேலூர், காந்தி நகர், சில்வாசா, குருகிராமம், திருச்சி ஆகியவை அடங்கும்.

Categories

Tech |