தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேர்தல் சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தேர்தல் குறித்து கூறி வருகின்றனர் இதனை அடுத்து,
கோயம்புத்தூரில் அவிநாசி சாலையில் இன்று மக்களவைத் தேர்தளுக்கான அறிக்கையை கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார் , அப்பொழுது அவர் தமிழகத்தில் சிஸ்டம் மோசமாகிவிட்டதாக கூறினார்.மேலும் தமிழகத்தில் நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
மத்தியில் இதுவரை ஆட்சி செய்த பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நிலவ வாய்ப்பு இருப்பதாகவும், ஆகவே தான் இந்திய மக்கள் இரண்டு அணியை தவிர்த்து மூன்றாவது அணி அமைய வேண்டும் என விரும்புகிறார்கள் என்றும் மக்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்களும் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள அரசியல் சூழ்நிலை தான் தன்னை கோபத்திற்கு ஆளாகச் செய்து அரசியலில் களமிறங்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் மக்கள் நீதி மய்யக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் .