Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி 1 இல்ல…. 2 மாஸ்க் கட்டாயம் போடணும்….கட்டுப்பாடு விதித்த அரசு…!!

மக்கள் இரண்டு முகக்கவசம் அணிய வேண்டும் என்று மஹாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து மீண்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து covid-19 சீனியர் உறுப்பினர் ஷாஷின் ஜோஷி ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், “ஊரடங்கு அமல்படுத்துவது என்பது கடுமையான நடவடிக்கை. ஊரடங்கை எளிதாக அமல்படுத்திவிடலாம் ஆனால் கொரோனா குறையுமா? என்பது தெரியவில்லை. எனவே ஊரடங்கு பிறப்பிப்பதில் எந்த பயனும் இல்லை. மேலும் மக்கள் 2 மாஸ் கட்டாயம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளி, தனிநபர் சுகாதாரம் ஆகியவற்றை கடைபிடிப்பது தான் சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |