Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி மின்சார ரயிலில்…. நீங்களும் பயணிக்கலாம்…. 10 மாதங்களுக்கு பிறகு அனுமதி…!!

மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து பொது சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் மும்பையில் கடந்த வருடம் மார்ச் 22ஆம் தேதி மின்சார ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பெண்களுக்கு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்களுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி கொடுக்கபடாமல் இருந்தது. இதையடுத்து மகாராஷ்டிர அரசு ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி நேற்று முதல் பொதுமக்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணியிலிருந்து மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தவிர்த்து மற்ற நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |