வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வேறு செயலுக்கு மாற்றமடைந்தனர். இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போது இந்த செயலி பரிசோதனையில் உள்ளது. முதற்கட்டமாக அரசு ஊழியர்கள் அனைவரும் இந்த செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் gims.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இந்த செயலியை குறித்து அறிந்து கொள்ளலாம்.