பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்த என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்டுகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் .அப்போது 4,486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையையும், சென்னை பீச் அத்திப்பட்டு இடையிலான ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் மோடியின் வ்ருகையொட்டி மதியம் 2 மணி முதல் 11 மணி வரை இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.