Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே! நாளை முதல் குடிநீர் கிடையாது – வெளியான அறிவிப்பு…!!

நாளை முதல் சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளகியுள்ளனர். இந்நிலையில் பெரு நகரங்களில் ஒப்பந்த லாரிகள் மூலமாக மாநகராட்சி தண்ணீர் சப்ளை செய்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் ஜனவரி 25 முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.

கடுமையான டீசல் விலை ஏற்றத்தால் லாரிகள் நஷ்டத்தில் இயங்குவதால் சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்த லாரிகள் நாளை முதல் இயக்கப்படாது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவித்துள்ளது.

Categories

Tech |