Categories
மதுரை மாவட்ட செய்திகள்

60 வயதுக்கு மேல் இருந்தால்….. வேலைக்கு வைக்காதீங்க….. மீறினால் நடவடிக்கை…. கலெக்டர் உத்தரவு….!!

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதுவரையிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதைச் சுற்றி இருக்கக் கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் தெற்குப் பகுதியான மதுரையில் பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு விகிதம் 2.6 சதவிகிதமாக உள்ளது. இதில், சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உடையவர்களுக்கு இறப்பு நேரிட வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப் படும் பட்சத்தில் அவர்களது இறப்பு விகிதம் நோய் உள்ளவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது.

ஈடுபடுத்தினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு சார்ந்த விழாக்கள் அல்லது சுபநிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்தியாக வேண்டிய சூழ்நிலை ஏதேனும் இருக்கும் பட்சத்திலும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் யாவும் கொரோனா பாதிப்பையும் அதனுடைய இறப்பு விகிதத்தையும் குறைப்பதற்காகவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |