Categories
தேசிய செய்திகள்

இந்த வயதுக்கு மேற்பட்டவர்கள்…. வருமானவரி தாக்கல் செய்ய வேண்டாம் – மத்திய அரசு அதிரடி…!!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.

மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்தார். இயதையடுத்து மத்திய பட்ஜெட் ஒவ்வொன்றாக வாசித்தார்.

அதில், 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தேவை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டுமே நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |