Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே கவனம்…. ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட…. 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்…!!

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய காலங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு  மக்கள் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்கள் எந்தவொரு நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றது. மேலும் பழங்கள் அனைத்தும் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக நமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 14 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பழங்களின் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் அமைந்திருக்கும் கடைகளில் சோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |