அடிப்படை வசதிக்கு கேட்டு கமிஷனரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு தற்போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி பொறுப்பு கமிஷனராக என்ஜினீயராக லலிதாமணி என்பவர் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரில் அடிப்படை வசதிகள் வேண்டும் என பொதுமக்கள் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். கடந்த நவம்பர் 9 ஆம் தேதியன்று லலிதாமணி சக அதிகாரிகளுடன் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரை பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு கமிஷனர் மற்றும் சக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளனர்.