கொலம்பியாவில் அதிபரை எதிர்த்து நாட்டு மக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கொலம்பியா குடியரசில் இவான் டியூக் என்பவர், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்தது. இதில் கொலம்பியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எனவே கொலம்பியா மக்கள் சிலர், இந்த நிலைக்கு அதிபர் இவான் டியூக், சரியாக திட்டமிடாதது தான் காரணம் என்று விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் கொலம்பியா மக்கள், அதிபர் இவான் டியூக் பொருளாதர நெருக்கடிக்கு பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலகக்கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன்படி அந்நாட்டில் மூன்றாம் வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் கொரோனா தொற்று மற்றும் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே கொலம்பியா அரசு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதால் தான் கொரோனா அதிகரிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.