நியூயார்க்கில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நகராட்சி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
உலக நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பூசியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், நியூயார்க் நகரத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து நகராட்சி பணியாளர்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதாவது, நியூயார்க் நகராட்சி பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி எடுக்காதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் மேயர் அலுவலகம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே, தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் 4,000 பேர் பணி நீக்கம் செய்யப்படும் நிலையில் இருக்கிறார்கள்.
நகராட்சி பணியாளர்களும், மக்களும், தடுப்பூசி எடுத்துக் கொள்வது தங்களின் உரிமை என்றும் அரசு நகராட்சி நிர்வாகம் உத்தரவை, திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.