Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி!”.. ஆயிரக்கணக்கான மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!!

ஆஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய நாட்டில் கட்டிட பணியாளர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து விக்டோரியா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சர்வாதிகாரம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் எவரும் முகக்கவசத்தை அணியவில்லை. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்நாட்டில், தற்போதுவரை சுமார் 83% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு சில பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று  இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |