Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதை இடிக்க நாங்க அனுமதிக்க மாட்டோம்” நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் விநாயகர் கோவிலை இடித்து அகற்றும்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற தண்டையார்பேட்டை மண்டலம் 32வது வார்டு அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி விநாயகர் கோவிலை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோவிலை இடிக்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்.கே நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலை இடித்து அகற்றுவதற்கு தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோயிலை இடிக்காமல் மண்டல அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.

 

Categories

Tech |