பிரேசிலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் அதிபரை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரேசில், உலக நாடுகளில் கொரோனா தொற்றில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் உலக நாடுகளின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையிலும் பிரேசில் முதல் இடத்தில் இருக்கிறது.
எனவே நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனராவை பதவி நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 26 மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. அதிபரை பதவி விலகக்கோரி முழக்கங்கள் எழுப்பப்படுகிறது. கொரோனாவை தடுப்பதற்கான செயல்பாடுகளை சரியாக கையாளவில்லை என்று போராட்டக்காரர்கள் அதிபர் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.