குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர்.
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய கட்டணம் ஏதும் வசூலிக்கப் படவில்லை.
ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தை நடத்தினரர்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், தங்களை இலவசமாக சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டுமென்று கூறினார்கள் . இதனை அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் அங்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாருடன் உடன்பாடு ஏற்பட்டதால் மக்கள் அங்கிருந்து சென்றனர்.