Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முறையாக பராமரிக்கவில்லை” கழிவுநீரால் சுகாதார சீர்கேடு…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரிக்காமல் உள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளிலும், குடியிருப்புகளிலும் ஆறாக ஓடி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது.

எனவே 100-க்கும் மேற்பட்டோர் அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய அலுவலகத்திற்கு முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் உதவி பொறியாளர் பூங்கொடி என்பவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |