Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் இல்லாமல் அவதி…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் கல்லாவி- ஊத்தங்கரை சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |