Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்…!!!

மதுராந்தகம் அருகில்  குடிநீர் கேட்டு மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரையபாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடடும்பங்கள் வசித்துவருகின்றனர்  இவர்களுக்கு பாலாற்று ஆழ்துளை கிணறு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பைப்லைனில் பழுது ஏற்பட்டதால் அதை சீர்செய்ய வேண்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள்  விடுத்திருந்தனர்.

இந்நிலையில்  கடந்த ஒரு வாரம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால்  கோபமடைந்த மக்கள், மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இத்தகவலை அறிந்து விரைந்து சென்ற போலீசார்  குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து அவர்கள் களைந்து சென்றனர்.

Categories

Tech |