Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெண் வி.ஏ.ஓ-வை கண்டித்து புகார்…. முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு…. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் ….!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வி.ஏ.ஓ அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மடவாளம் கிராமத்தைச் சார்ந்தவர் ஞானப்பிரகாசம். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். தற்போது இவருடைய மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். ஞானபிரகாசம் நேற்று அவரது வீட்டின் அருகே நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வழி மறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஞானப்பிரகாசம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் வடவாளம் கிராம நிர்வாக அலுவலரான அம்பிகா பணிகளை சரிவர செய்யவில்லை என்று அவர் மீது ஞானப்பிரகாசம் புகார் அளித்துள்ளார். இதனால் அம்பிகா ஆத்திரமடைந்ததால் அவரின் ஆதரவாளர்களை வைத்து தன்னை இவ்வாறு  செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி முத்துராஜா, புதுக்கோட்டை தாசில்தார் முருகு பாண்டியன், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் வி.ஏ.ஓ அம்பிகா மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |