Categories
உலக செய்திகள்

துனிசிய நாட்டின் பிரதமரை நீக்கிய அதிபர்.. ஆயிரக்கணக்கான மக்கள் அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!!

துனிசியா நாட்டின் அதிபரான கைஸ் சையத், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக தன் அதிகாரத்தை உயர்த்திக் கொண்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

துனிசியா நாட்டின் பிரதமரை கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதியன்று, அதிபர் கைஸ் சையத், பதவி நீக்கம் செய்தார். மேலும் நாட்டினுடைய நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதத்தில் தனக்கு அதிகாரங்களை அதிகரிக்கும்  விதத்திலான திருத்தங்களை அரசியலமைப்பில் கொண்டு வந்தார்.

ஆனால், இவை அனைத்தும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியில் உண்டான மாற்றங்களை சரி செய்வதற்காகத்தான் நடவடிக்கைகள் தான் என்று கூறினார். நாட்டு மக்கள் அதனை ஏற்கவில்லை. நாட்டின் தலைநகரான துனிசில் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

அதிபருக்கு அதிகமான அதிகாரங்கள் அளிக்கும் விதத்தில், அரசியலமைப்பில் ஏற்பட்ட திருத்தங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு மக்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Categories

Tech |