டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்திலுள்ள குருவித்துறை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதிச்சடங்கு நடத்துவது போல் இருசக்கரவாகனத்தை பாடையில் ஏற்றி கட்டி பின்னர் அதனை நான்கு பேர் தூக்கி சென்றனர்.
இதன் முன்பாக ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சென்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கி கிளை செயலாளர் ஓஞ்சிதேவன் முன்னிலை வகித்து நிர்வாகிகள் முத்துக்குமார், விஜய், காமாட்சி, திவாகரன், பிரபு, தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.