Categories
லைப் ஸ்டைல்

மக்களே…” சனிடைசரை ரொம்ப பயன்படுத்தாதீர்கள்”… கைரேகை அழியுதா… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தற்போது கிருமிநாசினி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து தோல் மருத்துவ நிபுணர் அன்சுல்வர்மன்  கூறியிருப்பதாவது: பல அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே அடிக்கடி பயன்படுத்துவதுவதால்   3 முதல் 4 சதவீதம் பேர் தங்கள் கைரேகை பதிவாகவில்லை என்று எங்களிடம் முறையிடுகின்றனர். ஆல்கஹால் தன்மை கொண்ட சானிடைசருக்கு பதிலாக சோப்பை பயன்படுத்தலாம் அல்லது சானிடைசர் பயன்படுத்திய சிறிது நேரத்தில் கைகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கைரேகை அழியும் நிலை ஏற்படும் போது வைட்டமின் ‘ஏ வகையான பொருட்களை பயன்படுத்தினால் தோல் வேகமாக உருவாகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். போபாலை சேர்ந்த நேகால் மிஸ்திரி என்பவர் கூறும்போது, நான் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 முறை கிருமி நாசினியை பயன்படுத்தினேன். தற்போது எனது கைரேகை சரியாக பதிவாகவில்லை. இது தொடர்பாக நான் தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார்.

Categories

Tech |