Categories
தேசிய செய்திகள்

மக்களே! ஆதார் எண்ணுடன் இதை சேர்க்க வேண்டுமாம்….. UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான செயல்பாடுகளிலும் முக்கியமான ஒரு ஆவணமாக திகழ்கிறது.

இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக ஆதார் அட்டை பெற்றவர்கள் அதில் புதிய விவரங்கள் ஏதும் சேர்க்காமல் இருந்தால் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது. அதன்படி ஆதார் அட்டையில் தங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் இருப்பிடச் சான்றுகளை உரிய முறையில் கட்டணம் செலுத்தி இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விவரங்களை மை ஆதார் என்ற இணையதளம் மூலமாகவோ, அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் சென்றோ இணைத்துக் கொள்ளலாம். மேலும் புதிய விவரங்களை சேர்ப்பது என்பது கட்டாயம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |