புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டமானது இன்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவக்கூடிய தற்போதைய கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு அறிவுரைகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருக்கிறார்.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கின்றார். மேலும் கொரோனா பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் உத்தரவிட்டிருக்கிறார்.
மிக முக்கியமாக கொரோனாவை தடுப்புக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக் கவசம் அணிவதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளாக பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.