கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 23 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாநில , தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு முழுவதும் சுஜித் மீண்டு வரவேண்டுமென்று பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். #prayforsurjith என்ற ஹேஷ்டக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. 24 ஆடியில் சிக்கி இருந்த சுஜித் தற்போது 70 அடிக்கும் மேலாக சிக்கியுள்ளது.
இந்நிலையில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , குழந்தை சுர்ஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவன் நலமுடன் மீட்கப்படவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டியது மக்களாகிய நம் கடமை என்று தெரிவித்துள்ளார்.
குழந்தை சுர்ஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவன் நலமுடன் மீட்கப்படவேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டியது மக்களாகிய நம் கடமை. #SaveSurjith
— Udhay (@Udhaystalin) October 26, 2019