கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடல் சரியான பாதுகாப்புடன் கையாளப்படுகின்றன. கொரோனா தொற்றால் இறந்தவர் உடல் மூலம் வைரஸ் கிருமி பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சென்னை மாநகராட்சி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இறந்தவர்களை மரியாதையுடன் அனுப்பி வைப்பதே மனித நேயம் என குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே நேற்று கொரோனா வைரஸால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்கிறோம்.
கொரோனாவால் சிலர் இறப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. சக மனிதர்களாகிய நாம் உலகை விட்டு பிரிந்தவர்களை மரியாதையுடன் அனுப்ப வேண்டியது நம் கடமை. உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் பயப்படாமல், கொரோனாவால் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைப்பது நமது கடமையாகும்.
உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் பயப்படாமல், கொரோனாவால் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை உருவான நிலையில் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.