கொரோனா பெருந்தொற்று தமிழகத்தை உலுக்கி, தற்போது தாக்கம் குறைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்திய அளவிலேயே சிறப்பான மருத்துவத்தால் தமிழகம் கொரோனாவை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. வரும் நாட்கள் பண்டிகை நாட்கள் என்பதால்… இந்த காலங்களில் கொரோனா பரவி விடக் கூடாது என்பதில் அரசு பல்வேறு விழிப்புணர்வு, ஆலோசனைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.
பண்டிகை நாட்களில் கூட்டநெரிசல், காற்றோட்டமில்லாத கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லக்கூடாது. மழைக்காலம் என்பதால் காய்ச்சல் உள்ளவர்கள் கொரோனா, டெங்கு, டைபாய்டு, மலேரியா, எலி காய்ச்சல் பரிசோதனையை டாக்டர் ஆலோசனைப்படி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.