ஜெர்மன் நாட்டில் தடுப்பூசி மையம் ஒன்றில் தடுப்பூசி செலுத்த 200 நபர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் காவல்துறையினர் அந்த மையத்தை அதிரடியாக அடைத்திருக்கிறார்கள்.
ஜெர்மன் நாட்டின் Lübeck என்ற நகரின் விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசி மையத்தில் அதிக மக்கள் தடுப்பூசி செலுத்த வரிசையில் நின்றுள்ளனர். எனவே, காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மருத்துவர், அரசாங்கத்தின் அனுமதி பெறாமல், அவராகவே தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு செலுத்திக் கொண்டிருந்துள்ளார்.
எனவே காவல்துறையினர், அந்த மையத்தை உடனடியாக அடைத்ததோடு, அங்கிருந்த ஊசிகள் மற்றும் மருந்துகளை கைப்பற்றினார்கள். எனினும், அதற்கு முன்பே, அந்த மருத்துவர் 50 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டார். Winfried Stöcker என்ற அந்த மருத்துவர், தொழில் அதிபராகவும் இருக்கிறார்.
அந்த விமான நிலையத்தை, அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை மக்களுக்கு அளிப்பது, அந்நாட்டின் சட்டப்படி குற்றம். எனவே, அதிகாரிகளை அவர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.