சீன நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 3 வாரங்களாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உணவு நிலையத்திலிருந்து உணவை திருடி சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. எனவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்நாட்டின் ஷாங்காய் மாகாணத்தில் 22 நாட்களுக்கும் அதிகமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மக்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தான் உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் வாங்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
NEW – Shanghai's inhuman "zero-COVID" lockdown leaves residents desperate for food and medicines.
Authorities now say they will ease restrictions after another mass test in China's most populous city.https://t.co/3VlV970kUo
— Disclose.tv (@disclosetv) April 9, 2022
இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால், ஊரடங்கை நீக்குவதற்கு அறிகுறிகள் இல்லை. இதனால் மக்கள் உணவு பொருட்களை வாங்க அருகே இருக்கும் உணவு நிலையங்களில் குவிந்திருக்கிறார்கள். அதன்படி, ஷாங்காய் மாகாணத்தில் இருக்கும் அவசர உணவு விநியோக நிலையத்தில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, அதிகப்படியான மக்கள் உணவுப்பொருட்களை திருடி சென்ற வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.