Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் பரவிருச்சுன்னா”… இதையெல்லாம் செய்யக்கூடாது… தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் மயானத்தில் கொரோனாவால்  இருந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் மயானம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் மின் மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் போது துகள்கள் பறந்து வந்து தங்கள் பகுதியில் விழுவதுடன் புகை மண்டலம் சூழ்ந்து காட்சி அளிக்கிறது.

இதனால் எங்களுக்கும் தொற்று பரவுமென அச்சத்தில் உள்ளோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் உயர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |