நியவிலை கடை செயல்படும் நேரத்தை குறைக்க கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏர்ரபட்டியில் 700-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் ஓரு நாள் முழுவதுமாக நியவிலை கடை செயல்பட்டு வந்துள்ளது. இதில் 650-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த நியாய விலை கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நியாய விலை கடையை முழு நேரம் செயல்பாட்டில் இருந்து பகுதி நேரமாக செயல்பட மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் முழு நேர நியாய விலை கடையை பகுதி நேரமாக மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து அங்கே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டத்திற்குப் விரோதமான செயல் என்று பொதுமக்களிடம் காவல்துறையினர் கூறியுள்ளார்.
அதன்பின் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கூறியதைக் கேட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் பொதுமக்கள் திடீரென நியாய விலைக் கடையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பில் காணப்பட்டுள்ளது.