ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை தலிபான் தீவிரவாதிகள் ஆக்கிரமித்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகிறார்கள். அதன்படி தற்போது பிற நாட்டின் தூதரகங்கள் உள்ள முக்கிய நகரமான காபூலை இன்று சூழ்ந்துள்ளார்கள்.
https://twitter.com/SufyanARahman/status/1426884575108677634
இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியான Ashraf Ghani ராஜினாமா செய்ததாகவும், 20 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காபூல் நகரினுள் தலிபான்கள் புகுந்தவுடன் மக்கள் பலரும் நகரைவிட்டு வெளியேறிவிட்டார்கள். எனினும், சிலர் தலீபான்களை அரவணைத்து, ஜனாதிபதியை எதிர்த்து மரண கோஷம் எழுப்பினார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.