Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகம் முழுவதும் இனி – அரசு திடீர் உத்தரவு…!!

முகக்கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இனி அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாய முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். ஊழியர்கள் அவ்வாறு முக கவசம் அணியாமல் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |