முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் கருப்பு கொண்டைக்கடலை வாங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு வெளியில் சென்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியை ஏப்ரல் முதல் நவம்பர் வரை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஜூலை முதல் நவம்பர் வரை முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ கருப்பு கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்பட்டது. தமிழக ரேஷன் கடைகளில் நவம்பர் வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் ரேஷன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபர் இறுதியில் தான் கருப்பு கொண்டைக்கடலை வந்தது. இதனால் முன்னுரிமை பெற்ற 1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கு சேர்த்து தலா 5 கிலோ கருப்பு கொண்டைக்கடலை வழங்கும் பணி இந்த மாதமே தொடங்கியுள்ளது. முன்னுரிமை அல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு கருப்பு கொண்டைக்கடலைக்கு பதிலாக ஒரு கிலோ துவரம்பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருப்பு கொண்டைகடலை வாங்க மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதாகவும், இதை வாங்காதவர்கள் என்று வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.