நீலகிரி மாவட்டத்தில் யானையின் மீது தீக்காயம் ஏற்படுத்தி உயிரிழக்க செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த 50 வயதுடைய யானை அடிக்கடி விவசாய நிலத்திற்க்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் யாரோ அந்த யானையின் மீது பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்துள்ளனர்.இதனால் யானையின் காதுகள் ரத்தம் வழிந்தபடி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து உள்ளது.
இதனை அறிந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்தி முதுமலை முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யானை உயிரிழந்தது. அதன்பின் யானையின் உடல், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.அதில் யானையை யாரோ பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தாக்கி இருப்பதால் அதன் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு அதிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது தெரியவந்தது.
மேலும் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் யானை அனிமியா நோய் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறது என்று அலுவலர்கள் கூறினர். இதனை அறிந்த வனத்துறையினர் யானையின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.