கொரோனா தொற்றுடன் வாழ பழக வேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலக நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், ஒமிக்ரான் தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உயிரிழப்பு ஏற்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் பிரிவு தலைவரான பஹீம் யூனுஸ், கொரோனோ தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழக வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், தரமான முகக்கவசத்தை அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனாவிடமிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.