வாட்ஸ் அப்பில் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் சமிபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பலரின் வாட்ஸ்அப் எண், ப்ரோஃபைல் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் கூகுளில் கசிந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக என்டிடிவி கேட்ஜட் 360 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாட்ஸ்அப் குரூப் என கூகுளில் தேடினால் போதும், பல்வேறு குரூப்களின் தகவல்கள், அதில் உள்ளவர்களின் மொலைல் எண்கள், அவர்களது புகைப்படம், அவர்கள் குரூப்களில் பகிர்ந்துள்ள தகவல்கள் என அனைத்தும் கிடைக்கின்றது. தற்போது 5000க்கும் மேற்பட்ட குரூப்களின் தகவல்கள் கூகுளில் கிடைக்கின்றது என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக தற்போது வரை வாட்ஸ் அப் மற்றும் கூகுள் நிறுவனங்கள் எந்த பதிலையும் வெளியிடவில்லை.