ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காளிங்காவரம், அக்ரஹாரம், குருமூர்த்தி கொட்டாய், தென்னூர் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் காளிங்காவரம் பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோபுரங்கள் இல்லாததால் மாணவ மாணவிகள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். எனவே அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.