Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலும் பொறுமையா இருக்க முடியாது…. நாங்க கேட்குறத செஞ்சி கொடுங்க…. போராட்டத்தால் பரபரப்பு….!!

நிரந்தர வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 12ஆம் தேதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது கல்லம்பாளையம் பகுதியில் இருக்கும் சாலையில் வேகமாக சென்ற கார் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து பல்லடம் காவல் துறையினர் அப்பகுதியில் சாலை தடுப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் அதே இடத்தில் கடந்த 13ஆம் தேதி சைக்கிள்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அந்த பகுதியில் நிரந்தர வேக தடை அமைக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது அந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் சாலை தடுப்பு மீது மோதியதால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்னும் வேகத்தடை அமைக்கவில்லை என்ற கோபத்தில் பல்லடம்-மங்கலம் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்டிப்பாக வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |